Perambalur: Free coaching classes for government competitive exams including TNPSC; Collector informs!


பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு வெளியாக உள்ள அறிவிப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் Common Classes – General Studies மற்றும் பொதுத் தமிழ் ( தமிழ் தகுதித் தேர்வு உட்பட) வரும் 03.12.2025-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுவரை 118-க்கும் மேற்பட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் அரசு வேலை பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

        இப்பயிற்சி மையத்தில், மத்திய மாநில அரசு பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றம் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் ,போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவு செய்து தரப்படும், போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி போன்ற சிறப்பம்ச வசதிகள் செய்து தரப்படும். எனவே, போட்டித்தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!