Perambalur: Free sewing machines for families of ex-servicemen; Collector informs!

model
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல் திட்டம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . எனவே, இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 40 வயதிற்கு உட்ப்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் , அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497