Perambalur: Gold and silver items worth Rs 1.25 lakh stolen after breaking the lock of a house! Police investigating!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி சுதா (32). கணவர் இறந்துவிட்ட நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்த சுதா, புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு நேற்று இரவு குழந்தைகளுடன் சென்று விட்டார். இன்று அதிகாலை திரும்பி வந்து வாடகை வீட்டை பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 பவுன் தோடு, 1/4 பவுன் மாட்டல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ரொக்கம் ரூ 20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் வழக்குப் பதிவு செய்ததுடன், போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை கைப்பற்றியும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.










kaalaimalar2@gmail.com |
9003770497