Perambalur: Herbicide disaster; 23.5 acres of maize crops died! Farmers who plowed with tractors argued with seller!

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள VRSSபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், வேலுசாமி, சுப்புராஜ், சுந்தர்ராஜ், ராஜேந்திரன், ராஜா உள்பட 7 விவசாயிகள் தங்கள் வயிலில் சாகுபடி செய்த மக்காச்சோள வயலில் களைகள் அதிகமாக இருந்ததால் அதை அழிப்பதற்கு, நெற்குணம் கிராமத்தில் ஜி. ஆர் என்ற மருந்து கடையில் ரெங்கநாதன் என்பவரிடம் கடந்த வாரம் 6ம் தேதி களைக்கொல்லி மருந்தை கேட்டனர். அவர் (Weed Killer) என்ற களைக்கொல்லி மருந்தை பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு 24 ஆயிரத்து 340க்கு விற்பனை செய்துள்ளார். விவசாயிகள் வாங்கி களைக்கொல்லியை மக்காச்சோளம் வயல்களில் தெளித்தனர். கடந்த சில களைசெடிகளுடன் மக்காச்சோள பயிர்களும் சேர்ந்து வாடி கருகி உயிரிழக்கத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து மருந்து விற்பனையாளரிடம் விவசாயிகள் சென்று கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த வேளாண்மை துறை அதிகாரிகள், மக்காச்சோளம் பாதிக்கப்பட்ட வயலுக்குச் சென்று பார்வையிட்டு அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வறிக்கை வந்த பின்னர் பூச்சி மருந்தின் தரம் குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்ததோடு, தங்கள் முழு உழைப்போம் வீணாகி விட்டதாகவும், மருந்து நிறுவனங்களும் ஏதும் கண்டுகொள்ளாததால் விரக்தியில் இருந்த விவசாயிகள் தங்கள் வயல்களை மீண்டும் பயிர் செய்ததற்காக டிராக்டர் மூலம், உயிரிழந்த மக்காச்சோள பயிர்களை அழித்து உழவு செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும், இதற்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் உரிய இழப்பீட்டை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வர வேண்டுமென உழவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!