Perambalur: High-level bridges on Marudhaiyar river at a cost of Rs. 10.09 crore; Collector inspects the works!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கூடலூர் – கூத்தூர் இடையிலும், கொளக்காநத்தம் – சாத்தனூர் இடையிலும் ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் உயர்மட்ட பாலம் கட்டும் பணி பணிகளை கலெக்டர் ந.மிருணாளினி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.

மாநில சிறப்பு திட்டம் 2025-2026ன் கீழ் -ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் கூடலூர் – கூத்தூர் இடையே மருதையாற்றின் குறுக்கே 116 மீட்டர் நீளமும், 8.40 மீட்டர் அகலத்துடன் 5 தூண்களுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல சாத்தனூர் ஊராட்சியில் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் – சாத்தனூர் இடையே மருதையாற்றின் குறுக்கே 43.05 மீட்டர் நீளமும், 8.71 மீட்டர் அகலமும், 4 தூண்களுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆக மொத்தம் ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், நடைபெறும் இப்பணிகள் மூலம் கொளக்காநத்தம் – சாத்தனூர் வழியாக கொட்டரை செல்லும் மக்களும், கூடலூர் – கூத்தூர் வழியாக செல்லும் பொதுமக்களும் மருதையாற்றை எளிதில் கடந்து பயணிக்க முடியும்.
பாலப்பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ந. மிருணாளினி பார்வையிட்டார். அப்போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!