Perambalur: IJK candidate Saranya campaigns in Veppur North Union; Muslim women of Lappaikudikadu offer their best wishes!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரண்யா இன்று காலை தனது மற்றும் கூட்டணி கட்சியினருடன் திருமாந்றை பகுதியில் இருந்து வாக்குகள் சேகரித்தார். 2026 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

லப்பைக்குடிக்காடு பகுதியில் வீதிவீதியாக சென்ற வேட்பாளர் சரண்யாவிற்கு அங்கிருந்த பெண்கள் அவரை வரவேற்று வாழ்த்தியும், ஆதரவு தெரிவித்தனர். மேலும், பெண் ஒருவர் முதன்முதலாக குன்னம் தொகுதியில் போட்டியிடுவதால் அவருக்கு இஸ்லாமிய கைகுலுக்கி வரவேற்றனர்.

பின்னர். திருமாந்துறை நோவாநகர், டி.கீரனூர், பென்னக்கோணம், கீழக்குடிக்காடு, லப்பைக்குடிக்காடு, கழனிவாசல், ஆடுதுறை, ஒகளூர், புதுப்பேட்டை, இந்திரா நகர், அத்தியூர் அகரம்சீகூர், அகரம்சீகூர் பார்டர்,
ரெட்டிக்குடிக்காடு, வதிஸ்டபுரம், கருப்பட்டாங்குறிச்சி, வயலூர் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். முன்னாள் எம்.பி சந்திரகாசி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண் தொண்டர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கர், புத்தர் சிலைகளுக்கு வேட்பாளர் சரண்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கிராமங்களில் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!