Perambalur: Illegal sale of liquor: Murder of a person who asked for free liquor by blackmailing him! Demand to replace a high-ranking police officer who was taking bribes!

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த வீராசாமி மகன் சுரேஷ் (37). டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த தினங்களுக்கு முன்பு தான் லிப்ட் கேட்டு வந்த பெண்ணை கற்பழித்து எரித்து கொன்ற வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு திரும்பி இருந்தார். இந்நிலையில் கொளத்தூரில் மது கள்ளத்தனமாக சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இன்று காலை அங்கு சென்ற சுரேஷ் மதுவிற்பவர்களிடம் ஓசியில் மது கேட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டதில் சுரேஷை தாக்கிய கும்பல் கொலை செய்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் சடலமாக சரிந்தார். கிராமத்தினர் சுரேஷின் உடலை எரிக்க முயன்றனர். தகவல் அறிந்த வி.ஏ.ஓ தடுத்து நிறுத்தி மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தளர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் பணிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பணத்தாசை கொண்ட காவல்துறையில் ஒரு உயர் அதிகாரி சந்து கடை, பார் முதல் குவாரி வரை மாமூல் வாங்கி குவிப்பதாலேயே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேற காரணமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உயர் அதிகாரிகளுக்கு மாமூல் வாங்குவதால் போலீசார் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், போலீஸ் ஸ்டேசன் ஒன்று ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை மாமூல் வசூலிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதனால், சிறிய மாவட்டமான பெரம்பலூரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோடிகளில் புரளும் காவல் துறை உயர் அதிகாரியை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497