Perambalur: In a POCSO case, a person who evaded the court’s arrest warrant and was absconding was arrested!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஊத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் கார்த்திக் (28). இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு பாடாலூர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கார்த்திக் வழக்கு விசாரணைக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அதனால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையறிந்த அவர் தலைமறைவானார்.
இதையடுத்து தனிப்படை எஸ்.ஐ. செந்தாமரைகண்ணன் மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த கார்த்திக்கை நேற்று கைது செய்து பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497