Perambalur: In the Trichy zonal-level sports competitions for the fire department personnel, the Thanjavur and Thiruvarur team emerged as the overall champions!

பெரம்பலூரில், அரசின் மாவட்டவிளையாட்டு மைதானத்தில கடந்த 2 நாட்கள் நடந்தது. தீயணைப்புத்துறை வீரர்களுக்கான திறனை மேம்படுத்தும் வகையிலான நீச்சல், கையிறு ஏறுதல், நீரிடுவாய், ஏணி, தந்திரக் கதம்ப போட்டிகள் உள்பட பல போட்டிகள் குழு மற்றும் தனிநபர்களுக்கு நடத்தப்பட்டது. மேலும், குழு விளையாட்டுக்காக கூடைப்பந்து, கைப்பந்து இறகுப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், தொழில் நுட்ப பிரிவில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் அணிகள் முதல் பரிசையும் தடகளப் போட்டிகளில் திருவாரூர் தஞ்சாவூர் அணிகள் முதல் பரிசையும் நீச்சல் போட்டியில் திருச்சிராப்பள்ளி அணி முதல் பரிசையும் ஒட்டுமொத்த சாம்பியனாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் அணிகள் வெற்றி பெற்றன ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த அணி வீரர்களும் சென்னையில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் மேற்படி நிகழ்விற்கு திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தலைமைவகித்தார். பெரம்பலூர் மாவட்ட அலுவலர் அனுசியா வரவேற்றார். திருச்சிராப்பள்ளி மாவட்ட அலுவலர் வினோத் , தஞ்சை மாவட்ட அலுவலர் குமார், திருவாரூர் மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாட்ஷா, கரூர் மாவட்ட அலுவலர் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி மாவட்ட அலுவலர்கள் கருணாகரன், வீரபாகு ஆகியோர் உள்பட பலர் கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் வீரர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தார்கள்.









kaalaimalar2@gmail.com |
9003770497