Perambalur: Investment subsidy for starting value addition and processing industries in agricultural products; Collector’s information!

வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டு அலகுகள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல்” திட்டத்தின்கீழ் வேளாண் பொருட்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முடுதலீட்டு மானியம் 25 சதவீதமும் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தொழில் துறையில் பின்தங்கிய வட்டாரங்களில் ( சிறு, குறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை பட்டியலின் படி) தொழில் துவங்குவதற்கு கூடுதலாக 10 சதவீதமும் அதாவது 35 சதவீதம் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்த பட்சம் 5 சதவீதமாக இருக்கவேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாக பெறலாம்.இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண் அல்லது தோட்டக்கலை விளைபொருட்களின் 2ம் நிலை அல்லது 3ம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும்.
முதலீட்டு மானியத் தொகையானது 60 % மற்றும் 40 % ஆகிய இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் முதலீட்டு மானியத் தொகை இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கக்கூடிய தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வலைதளத்திலிருந்து https://www.agrimark.tn.gov.in விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்ப படிவம் (இணைப்பு.2) மற்றும் ஆவணங்களுடன் (இணைப்பு.3) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருக்கு அனுப்பிடவேண்டும். விண்ணப்பங்கள் முழுமையான திட்ட அறிக்கை மற்றும் வங்கி ஒப்புதல் கடிதம், வங்கி பரிந்துரை கடிதம் மற்றும் இதர விவரங்களைக் கொண்டிருக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497