Perambalur is a training center for the Tamil Nadu BJP; The story of a rat being picked up by a grandson and granddaughter in a house with a cat; Demand to ban party programs in educational institutions!

பெரம்பலூரில் 3 முக்கிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு கட்சியை சார்ந்து உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மையப்பகுதியாக இருப்பதால், தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் காரில் சுமார் 4லிருந்து 5 மணி நேரத்திற்குள்ளும், பொதுபோக்குவரத்தில் 5 – லிருந்து 7 மணி நேரத்திற்குள் பெரம்பலூரை வந்தடைந்து விடலாம். முடியும். அதனால், பெரம்பலூரில் சிறுபான்மையாக இருந்த பிஜேபி தற்போது பெரிய அளவில் வளரத் தொடங்கி உள்ளது. அதற்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இடம் கிடைப்பதால் வசதியாகி விட்டது. கம்யூனிச சிந்தாந்தங்கள் மற்றும் திராவிடக் கொள்கைள் கொண்டவர்கள், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் பெரம்பலூரில் அதிக பேர்களும், முக்கிய பிரமுகர்களும் உள்ள நிலையில், பெரம்பலூர்தான் தற்போது RSS மற்றும் பாஜகவின் பயிற்சி அளிக்கவும், கூட்டங்கள் நடத்தும் கூடரமாகவும் மாறி வருகிறது. இது தற்போது பூனை இருக்கும் வீட்டில் எலி, பேரன், பேத்தி எடுத்த கதையாகி வருகிறது என பெரம்பலூரில் பேசப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல், தற்போது கவுன்லிங் மூலம் மாணவர்கள் அதிகளவில் தேர்வாகி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினர் பல கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் கட்சி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த அரசு தடைவிதிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வரும் தேர்தலுக்கு இங்கிருந்தே அனைத்து வியூகங்கள் வகுக்கப்பபட்டு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முன்னெடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், எந்த விதத்திலும் மற்ற கட்சிக்காரர்கள் எதிர்த்து விடக்கூடாது என்ற நோக்கில் அனைத்து கட்சியினருக்கும் பாரபட்சமின்றி நன்கொடைகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!