Perambalur: K.N. Arun Nehru MP; Inaugurated completed works worth Rs. 1.10 crore and laid the foundation stone for new projects!

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதிமேம்பாட்டு நிதியின் மூலம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ.3.80 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை எம்.பி கே.என்.அருண்நேரு திறந்து வைத்தார்.
மேலும், வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட (எசனை) காட்டுமாரியம்மன் கோயில் பின்புறத்தில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்யுடன் கூடிய சிறு பாலம் அமைக்கும் பணியினையும், வேப்பந்தட்டை ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ரூ.17.92 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியையும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் பேவர் பிளாக் தளம் அமைப்பதற்கான பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கிவைத்தார்.
மேலும், கிருஷ்ணாபுரம் தெற்கு வீதியில் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்யுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், வாலிகண்டபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் நம்ம ஊரு நம்ம அரசு என்ற திட்டத்தின் மூலம் ரூ.3.15 இலட்சம் மதிப்பில் வாய்க்கால் தூர் வாரும் பணியினையும், வேப்பந்தட்டை காமராஜ் நகர் முதல் அன்னமங்கலம் வரை மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.47.70 இலட்சம் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கிவைத்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, எம்.ஆர்.எப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியியின் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 41.22 லட்சம் மதிப்பிலான 7 பணிகளும், பிற திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்படும் ரூ.68.85 மதிப்பிலான 3 பணிகளும் என மொத்தம் ரூ.1.10 கோடி மதிப்பிலான பணிகள் இன்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட திமுக பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன்
நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட திமுக துணைச் செயலாளர் டி.சி.பாஸ்கர், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497