பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக க.நந்தகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த க.நந்தகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர்.தரேஸ் அஹமது தனது பொறுப்புகளை புதிய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் முதலில் கோயம்புத்தூரில் பயிற்சி துணை ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியராகவும், நிதித்துறையில் சார்புச் செயலாளராகவும் பின்னர் துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக 11.2.2012 முதல் பணியாற்றி வந்த இவர் 22.1.2016 முதல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.