Perambalur: Kudos to the sanitation worker who returned a gold chain lost in the garbage to its rightful owner!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு வெங்கடாஜலபதி நகரில் வசிக்கும் ஹீரா பாய் என்பவர் அவருடைய 8 கிராம் எடையுள்ள தங்கச் செயினை நேற்று குப்பையில் தவற விட்டு விட்டார். இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், நகராட்சி தூய்மை பணியாளர் தாமரைச்செல்வி என்பவர் அதனை தேடி எடுத்து நகராட்சித் தலைவர் அம்பிகா, ஆணையர், சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தார்.நகராட்சித் தலைவரின் கணவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான வக்கீல் என்.ராஜேந்திரன் தூய்மைப் பணியாளர் தாமரைச் செல்விக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இதே போல நகராட்சி ஊழியர்களும், நகையை தொலைத்த ஹீராபாய் ஆகியோரும் பாராட்டினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!