Perambalur: Kunnam Electricity Distribution Division and Executive Engineer’s Office: Minister Sivasankar inaugurated!

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்நுகர்வோர்களின் குறைகளை உடனுக்குடன், நிவர்த்தி செய்யவும், தடையில்லா தரமான மின்சாரத்தை வழங்கிடவும், ஒரே கோட்டமாக செயல்பட்டு வந்த பெரம்பலூர் கோட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய குன்னம் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டத்தின் கீழ் லப்பைக்குடிக்காடு குன்னம் மற்றும் சிறுவாச்சூர் ஆகிய பகுதிகளில் உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்களை உள்ளடக்கிய உபகோட்டங்கள் மற்றும் லப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், சின்னாறு அணை, வ.களத்தூர், வேப்பூர், மருதையான் கோவில், துங்கபுரம். சிறுவாச்சூர். பாடாலூர், கொளக்காநத்தம், செட்டிக்குளம் ஆகிய 11 பிரிவு அலுவலகங்கள் செயல்படும். மேலும், 10 துணைமின் நிலையங்கள் கட்டுப்பாட்டில் செயல்படும்.
சுமார் 1,40,399 மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி கொள்ளவும், மின் நுகர்வோர்களுக்கு தரமான தடையில்லா மின்சாரத்தினை விரைந்து அளித்திடவும், சிறந்த நுகர்வோர் சேவை வழங்கிடவும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.
கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் குன்னம்.சி. ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அழகு.நீலமேகம், மதியழகன், ராஜேந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் PSR @ பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வ.சுப்பிரமணியன், மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள்,பொதுமக்கள் திமுக கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497