Perambalur: Lawyers boycott court and protest, insisting on physical filing system!

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் e-Filing முறையை போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காமலும், உரிய தொழில்நுட்ப திறமையுடன் கூடிய நீதிமன்ற ஊழியர்களை போதுமான அளவிற்கு நியமனம் செய்யாமலும், விசாரணை நீதிமன்றங்களில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் விசாரணை நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் மிகுந்த சிரமத்தையும், நேர விரையத்தையும் ஏற்படுத்துகிறது. இது குறித்து, வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மூலம் பல கோரிக்கை மனுக்களை அளித்தும், எந்த நடவடிக்கைளும் எடுக்காமல் 01.12.2025 முதல் e-Filing முறையை கட்டாயப்படுத்தியிருப்பது பொறுத்தமானதாக இல்லையென்பதாலும், நீதிமன்றங்களில் அதற்கான வசதி வாய்ப்புகளை முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்காமல் e-Filing முறையை நடைமுறைபடுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டியும் நடைமுறையில் இருந்த Physical Filing முறையை தொடர்ந்து அனுமதிக்க வலியுறுத்தியும் இன்று முதல் வரும் டிச12ம் தேதி வரை நீதிமன்றங்களில் பணிபுரியும் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியிலிருந்து விலகி புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!