Perambalur: Man arrested for illegally selling government liquor bottles; police take action!
பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊரல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இன்று 09.01.2025 – ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளப்பட்டி கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அரும்பாவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிற்றரசன் தலைமையிலாக குழுவினர் ரோந்து சென்ற போது, கள்ளப்பட்டி முருகன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த குமாரசாமி மகன் தேவராஜ் (54) சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவரை, கைது செய்ததுடன் அவரிடமிருந்து, 30 மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.