Perambalur: Man arrested for possessing 8 kg of banned gutka!

பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரம் கிராமத்தில் தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தியதில், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் தங்கராஜ் (63) என்பவர், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்த பாடாலூர் போலீசார், அவரிடமிருந்து 1.2 கிலோ ஹான்ஸ் , 403 கிராம் கூல் லீப், 3.075 கிலோ விமல் பாக்கு, 1.230 கிலோ V1 பான் மசாலா மற்றும் 1.560 கிலோ தம்பாக்கு என மொத்தம் 8.143 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த தங்கராஜை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497