Perambalur: Man trapped in quarry landslide recovered as a body on the 3rd day!

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளத்தில் நேற்று முன்தினம் கல்குவாரியில் வெடி வைத்து விட்டு திரும்பிய தொழிலாளர்கள் பரத் மற்றும் கூலி தொழிலாளியான திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோதூர்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்கரவர்த்தி (45) ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட பின்னர் வெடிப்பதற்கு பயன்படுத்திய கம்பிகளை சுற்றினர். அப்போது திடீரென்று கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் பரத் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் 40 அடி பள்ளத்தில் சக்கரவர்த்தி மண் சரிவில் சிக்கி கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குவாரிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் மற்றும் பனி, குளிர், மழை காரணமாக மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று மதியம் பாறை இடுக்களில் சிக்கிய சக்கரவர்த்தியை சடலமாக மீட்டனர். பின்னர், உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
குவாரிகள் குறித்து கலெக்டர் மிருணாளினி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று த வில் வாய்ஸ் என்ற பத்திரிகை ஒன்று பாடாலூரில் போஸ்டர் ஒட்டினர். இந்த துயர சம்பவம் நடக்கும் முன்னிரவே வருவாய் துறையினர் புகாரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் L போர்டு, அப்ரண்ட்டிஸ் அதிகாரிகளையே புரோமோசன் பெயரில் தலைமைச் செயலகம் நியமிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் பெரம்பலூரில் என்ன வேலை என தெரிந்து கொள்வதற்குள் பொதுமக்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்திருக்கும் கலெக்டர், டி.ஆர்.ஓ, போலீஸ் எஸ்.பி உள்ளிட்ட பல அதிகாரிகள் பதவி உயர்வில் வருவதால் பொதுமக்கள் பல அப்பாவிகள் பெரும் சிரமமப்படுகின்றனர். தமிழ் தெரியாத கலெக்டர் கிரேஸ் பச்சாவால் சுமார் 11 மாதங்கள் மாவட்ட வளர்ச்சி பின்னடைவை சந்தித்தது. பொதுமக்கள் பலர் அவதிப்பட்டனர். அடுத்த அருண்ராஜீவோ நல்லது செய்ய ஆரம்பித்தார். ஆனால், அவரும் சில புகாரில் சிக்கியதால் மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், வேலை தெரியாத நிர்வாக அதிகாரிகளால், லஞ்சம் வாங்கி கொண்டு திருப்பி கொடுக்கும் அளவிற்கு நேர்மையான அலுவர்கள் இருக்கும் மாவட்டமாகவும், லஞ்சம் வாங்கி பிரச்சனை ஏற்பட்டால் உயிர் ஆபத்து என புகார் கொடுக்கும் அலுவலர்களும், அவருக்கு பதவி உயர்வு வழங்கும் மாவட்டமாகவும் பெரம்பலூர் மாவட்டம் தற்போது அதிகாரிகளால் ஆளப்படுகிறது. சக்கவர்த்தி போன்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் பலியாவதோ, அவர்கள் குடும்பங்கள் நிர்கதியாக நிற்பது குறித்தோ அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை. அவரவர் கல்லாப்பெட்டி நிறைந்தால் போதும் என்ற நிலை சமூகத்தில் மாறி வருகிறது.











kaalaimalar2@gmail.com |
9003770497