Perambalur: Masked robbers snatched a 6 3/4 sovereign gold chain from a woman; they attacked her husband with an iron pipe when he tried to intervene!

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராமர் (34). இவரது மனைவி ஐஸ்வர்யா (23). ராமர் லாரி வைத்து டிரைவர் தொழில் செய்து வருகிறார். ராமர் தனது மனைவி மகன்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை சுமார் 3.15: மணியளவில் வீட்டின் முன்பக்க கதவு உள் தாழ்ப்பாழை வெளிப்புறத்தில் இருந்து இரும்பு கம்பியால் நெம்பி கதவை திறந்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்து இருந்த கொள்ளையர்கள் ஐஸ்வர்யா கழுத்தில் அணிந்து இருந்த 6 3/4 பவுன் தாலிக்கொடியை பறித்தனர். சுதாரித்த அவர் சத்தம் கேட்டு எழுந்த ராமர் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் வைத்திருந்த இரும்பு பைப்பால் இடது கணுக்கால் தாக்கி விட்டு 2 பேர் தப்பி சென்று விட்டனர்.

இதே போல, அருகில் குடியிருக்கும் வரும் வேலு (57). இவர் வரகூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார். இவர் வீட்டிலும் முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இது குறித்த புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடம் சென்றதுடன் அருகிலுள்ள சிசிடிவி கேமரா மற்றும் மன்னர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!