Perambalur: Medical shops shut down in protest, organized by the Tamil Nadu Pharmaceutical Traders Association, condemning the online sale of medicines.

இன்று நாடு முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்து கடைகள் கடை அடைப்பு செய்து போராட்டம் நடத்தினர். ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்தவும், வலி நிவாரணி & தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்கவும், உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவும்,
போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க கோரியும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, இன்று ஒரு நாள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். இன்று பெரும்பாலான கடைகள் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது.ஓரிரு கடைகள் மட்டுமே திறந்து இருந்த நிலையில் பொதுமக்களின் அவசர தேவைக்காக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497