Perambalur: MLA Sivakumar inaugurated the MLA office and received petitions.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதரசா சாலையில் BSNL அலுவலகம் அருகே உள்ள அரசின் சார்பில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது. அநடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற MLA கி. சிவகுமார் இன்று தனது கட்சியினர் புடைசூழ திறந்து வைத்தார். முன்னதாக இன்று காலை, காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அலுவலகம் திறப்பு விழாவின் போது, மாவட்ட இணை செயலாளர் ரேகா ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் முத்தமிழ் செல்வன், சங்கீதா முத்துக்குமார், துணை செயலாளர்கள் சசிகுமார், ஈஸ்வரன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் தேவ சாந்தி, செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகா இளங்கோவன், முத்துமாரி, தமீம் அன்சாரி, இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் சின்னதுரை, ராமகிருஷ்ணன், மணிகண்டன், வினோத், புருஷோத்தமன், புஷ்பராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் வில்லு விஜய், குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், மாவட்ட ஐடி விங் ராஜேஷ், சிறுவாச்சூர் விஜய் மூக்கன், அய்யலூர் விஜய் கட்சி நிர்வாகிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலர் புத்தங்கள், நோட்டுகள் வழங்கினர். பொன்னாடை போர்த்தி, எம்.எல்.ஏ சிவக்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இன்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ சிவக்குமார், உரிய எடுப்பதாக உறுதி அளித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497