Perambalur: Students who applied for admission under the RTE Act selected via a Suffle system — Collector Informs.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 சட்டப்பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு 20.04.2026 முதல் 18.05.2026 வரை இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
19.05.2026 வரை 64 பள்ளிகளுக்கு பெறப்பட்ட 1235 விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் RTE 25% மொத்த மாணவர் சேர்க்கை 864 ஆகும். இதற்கான சேர்க்கை ஆனது வருகிற 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளிலும் குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர் / எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவு தொழிலாளியின் குழந்தை / மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
தற்போது நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட விண்ணப்பங்கள் குறைவாக இருந்தால் அனைத்து மாணவர்களையும் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படும் . தற்போது நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டோர் எவரேனும் சேர்க்கைக்கு வரவில்லை எனில் அந்த இடத்திற்கான வாய்ப்பினை வழங்கும் பொருட்டு காத்திருப்போர் பட்டியலில் 5 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், விடுப்பட்ட ஆவணங்கள் அளிக்காத பெற்றோர்கள் அந்தந்த பள்ளியில் குலுக்கல் தினமான 22.05.2026 அன்று நேரில் கலந்து கொண்டு ஆவணங்களை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497