Perambalur: Minister Sivasankar distributed question and answer books to 1624 government school students at their own expense!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், கல்வி சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள முக்கிய வினா-விடைகள் அடங்கிய ”தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பிலான புத்தகங்களை தனது சொந்த செலவில் தயார் செய்து வழங்கி வருகின்றார்.
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியம்மாபாளையம், ஒதியம், பீல்வாடி, அசூர், எழுமூர், காருகுடி, பெருமத்தூர், நன்னை, பரவாய், வரகூர், புதுவேட்டக்குடி மற்றும் காடூர் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருவத்தூர், பேரளி மற்றும் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கும் “தேர்வைவெல்வோம்” வினா விடை புத்தகங்களை வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 17 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,624 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
இந்தப் புத்தகங்கள் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மற்றும் அரசுப் பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பின் மாணவ மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில், தேர்வில் கட்டாயம் கேட்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வினாக்கள் அதற்கான விடைகளுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாக்களும், விடைகளும் மாணவர்களுக்கு புரியும் வகையிலும் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சிவசங்கர் மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை தனது சொந்த செலவில் தயாரித்து வழங்கி, பொதுத்தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வெற்றிபெற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் சேர்மன் பிரபாசெல்லப்பபிள்ளை, மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497