Perambalur: Minister Sivashankar inaugurated bus services by extending 14 routes!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பபட்ட தேனூர், செட்டிக்குளம், மாவிலங்கை, மேட்டுப்பாளையம், கல்பூண்டி, வேப்பந்தட்டை, வி.களத்தூர், திருவாளந்துறை, கொரக்கவாடி, பசும்பலூர், வெள்ளுவாடி, வேப்படிபாலக்காடு, பூலாம்பாடி, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று ஆகிய பகுதிகளிலிருந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் மற்றும் குன்னம் கிளையிலிருந்து 14 இடங்களில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட நகர மற்றும் புறநகர பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செட்டிக்கும், மாவிலங்கை வழியாக – தேனூர் வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை தினசரி 2 நடைகள் கூடுதலாகவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரம் வழியாக தினசரி 10 பேருந்துகள் 32 நடைகள் செல்லும் வகையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் இருந்து காலையில் வாலிகண்டபுரம், வழியாக மேட்டுப்பாளையம் வரையில் இயக்கப்பட்ட நகர பேருந்து வழித்தடத்தை சாத்தனவாடி வரை கூடுதலாக 2 நடைகள் வழித்தடம் நீட்டிப்பு செய்தும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேப்பந்தட்டை, வி.களத்தூர், திருவாளந்துறை வழியாக கல்பூண்டி ரைஸ்மில் வரை காலை, மாலை என தினசரி 4 நடைகள் நகர பேருந்து வழித்தடத்தை நீட்டித்தும், பெரம்பலூரிலிருந்து வெள்ளுவாடி வரை காலை, மாலை என இயக்கப்பட்ட பேருந்து சேவையினை வெள்ளுவாடியிருந்து கொரக்கவாடி வரை 4 புறநகர் பேருந்துகள் தினசரி 10 நடைகள் புறநகர் பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்தும், காலை வேப்படி பாலக்காட்டிலிருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் புறநகர் பேருந்தை பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், இரவு பூலாம்பாடியிலிருந்து அரும்பாவூர், பெரம்பலூர் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் புறநகர் பேருந்து வழித்தடத்தை பெரியம்மாபாளையம், இந்திரா நகர், அரும்பாவூர் வழியாக வழித்தடம் மாற்றம் செய்தும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரும்பாவூர், கொட்டாரக்குன்று வழியாக மலையாளப்பட்டி வரை இயக்கப்பட்ட நகர பேருந்து தினசரி 2 நடைகள் கொட்டாரக்குன்றிலிருந்து மலையாளப்பட்டி வரை வழித்தடம் நீட்டிப்பு செய்தும் மக்களின் நலன் கருதி தொடங்கி வைக்கப்பட்டது.
கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசாமி, ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் கான்ட்ராக்டகர் தழுதாழை சி. பாஸ்கர், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர், ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, ஜெகதீஸ்வரன், டாக்டர் வல்லபன், வெள்ளுவாடி ரவி, போக்குவரத்து துறை அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து கழக பணியாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497