Perambalur: Minister Sivashankar inaugurated the extension of government bus services on 6 routes!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் யூனியனை சேர்ந்த ஆதனூர், வரகுபாடி, கொளக்காநத்தம், கூடலூர், மேத்தால் ஆகிய பகுதிகளிலிருந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், 4 நகரப் பேருந்துகள் மற்றும் 1 புறநகரப் பேருந்துகளின் வழிதடத்தினை நீட்டிப்பு செய்தும் மற்றும் 1 புற நகரப் புதிய பேருந்து சேவையினை தொடங்கியும் வைத்தார்.
கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி, வருவாய் துறை, போக்குவரத்து பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497