Perambalur: Minister Sivashankar inaugurated works worth Rs. 18.07 crore in Alathur union!

பெரம்பலூர்: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அழகிரிபாளையம், கீழமாத்தூர், மேலமாத்தூர், இலந்தங்குழி, கூத்தூர், ஆதனூர், குரும்பாபாளையம், தெற்குமாதவி, காரை, கொளக்காநத்தம், அணைப்பாடி, கொளத்தூர், இலுப்பைக்குடி, கூடலூர், இராமலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், தார் சாலை அமைக்கும் பணிகள், மெட்டல் சாலை அமைக்கும் பணி, சாலைகள் பலப்படுத்தும் பணிகள், பாலம் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தும் பணி, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி செயலக கட்டடம் கட்டும் பணி, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, சாலை பராமரிப்பு பணிகள் என மொத்தம் ரூ.17.54 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
மேலும், இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒரு வகுப்பறை கட்டடமும், ரூ.13.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடமும், கொளத்தூரில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடை , கொளத்தூர் மற்றும் இலுப்பைக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.5.92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் என மொத்தம் ரூ.53.14 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிராபகரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ந. கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் மற்றும் ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வருவாய் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497