Perambalur – MLAs opened Amma Mini Clinic in Aranarai.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில், அம்மா மினிகிளினிக் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது. அம்மாப்பாளையம் வட்டார மருத்துவர் சூரியகுமார் வரவேற்றார். விழாவில் அம்மா மினிகிளிக்கை திறந்து வைத்த ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசியதாவது: பெண்களுக்கும், ஏழை நடுத்தர மக்களும் முன்னேற அதிக அளவில் திட்டங்களை கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளை காப்பாற்றி வளர்த்து, அவர்களின் கல்வி செலவையும் அரசே ஏற்க செய்து வருகிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கியவர் தான் ஜெயலலிதா. பள்ளிகளில், மாணவிகளுக்கு நாப்கின் திட்டத்தை வழங்கியவர் அம்மா ஜெயலலிதா. அதே வழியில் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். விவசாயியாக இருந்ததால் விவசாயிகளின் நிலை கருதி, வங்கி கடன்களை ரத்து செய்ததோடு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கி உள்ளார். மேலும், பல திட்டங்களை வழங்கி, தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும் முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் பேபிகாமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.