Perambalur Municipal Commissioner suspended
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக இருந்த குமரிமன்னனை, சென்னை முனிசிபல் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐ.ஏ.ஏஸ் சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூரில் பணியாற்றி வந்த ச.குமரிமன்னன், வாலாஜா பேட்டைக்கு மாற்றம்செய்யப்பட்டார். ஆனால், அவர் பணியில் சேராமல் தொடர்ந்து பெரம்பலூரிலேயே இருந்ததால், பெரம்பலூருக்கு அம்பாசமுத்திரத்தில் இருந்து பணிமாறுதல் செய்யப்பட்ட பார்க்கவி வேறு ஒரு நகராட்சிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனால், மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
மேலும், இன்று சென்னை முனிசிபல் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐ.ஏ.ஏஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதில், பெரம்பலூர் நகராட்சியின் முன்னாள் கமிஷனர் குமரிமன்னன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் இருக்க வேண்டும், வெளியூர் செல்வதாக இருந்தால் உரிய அனுமதி பெற்றே வெளியே செல்லவேண்டும், மேலும், அவருக்கான சம்பளம் உள்ளிட்ட படிகள் பாதியாக குறைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிவில் சர்வீஸ் டிசிபிலின் அண்ட் அப்பீல் ரூல்ஸ் 1955 e 17ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.