Perambalur: My town, my dream project; Meeting to seek public opinion led by Minister Sivashankar!

“என் ஊரு என் கனவு” திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டம் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகள் எவ்வித தடையும் இல்லாமல் உயர் கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் என வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் , பொதுமக்களின் குறைகளை அரசுத்துறை அலுவலர்கள் நேரில் சென்று கேட்டறிய உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்புமிக்க திட்டத்தினை செயல்படுத்தி அந்தத் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட முகாம்களில் பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தேவையான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ஒவ்வொரு கிராமங்களையும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில், என் ஊர் என் கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அறிக்கையினை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்படவுள்ளது.
மேலும், தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் ஒரு டிரில்லியன் அளவிவலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிறப்பு திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அயலக நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதன் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் எறையூரில் பிரபல காலணி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் அதிக எண்ணிக்கையில் மகளிர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு தனி மனிதருடைய பிரச்சனையும் தீர வேண்டும் அதே சமயத்தில் தமிழ்நாட்டின் பிரச்சனையும் தீர வேண்டும் அந்த வகையில் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்கள். அதற்காக பல்வேறு திட்டங்களை முன்கூட்டியே தயாரித்து வைத்துள்ளார். அதன் வாயிலாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் என் ஊர் என் கனவு என்ற திட்டம். இத்திட்டத்தின் மூலமாக பெறப்படும் கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் நிறைவேற்றுவார், என பேசினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 27 பயனாளிகளுக்கு ரூ.26.62 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அட்மா சேர்மன் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ்குமார், துரைசாமி, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், பேரூராட்சி தலைவர்கள் லெப்பை குடிக்காடு, ஜாகீர் உசேன் குரும்பலூர் சங்கீதா ராமேஷ், அரும்பாவூர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் சி.பாஸ்கர், மகாதேவி ஜெயபால் மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497