Perambalur: National-level table tennis competition with participation from 38 states: Collector Mrinalini inaugurated the event! Minister Sivasankar visited the venue!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 69 வது தேசிய அளவிலான , 17 வயது க்கு உட்பட்ட பள்ளி மாணவ – மாணவிகளுக்கான மேசைப் பந்து போட்டியை கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்தார். இன்று முதல் முதல் வரும் டிச. 30 வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேஷ், கேரளா, திரிபுரா,புதுச்சேரி, ராஜஸ்தான், கோவா, கர்நாடகா, பஞ்சாப், மணிப்பூர், சட்டீஸ்கர், நவோதயா வித்யாலயா, பீகார், உத்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ், ஒடிசா, சி.பி.எஸ்.இ பள்ளிகள், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், கேந்திர வித்யாலயா, அஸ்ஸாம், சண்டிகர், வித்யா பாரதி, டெல்லி, council for the India School, IPSC, IBSSO ஆகிய குழுவினர் என இதில் 36 மாநிலங்களைச் சேர்ந்த குழுவினர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிகள் குழு மற்றும் தனிநபர் (லீக் மற்றும் நாட்கோட்) முறையில் நடைபெறும். இப்போட்டியில் 178 மாணவர்கள், 171 மாணவிகள் மற்றும் 127 அணி மேலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் முதல் 3 இடம் பெறும் மாணவ / மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதங்கங்கள், கோப்பைகள் வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவ/ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. கலெக்டர் மிருணாளினி, போலீஸ் எஸ் பி ஆதர்ஷ் பசேரா, சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் மருவத்தூர் சி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.











kaalaimalar2@gmail.com |
9003770497