Perambalur: National Lok Adalat; Orders issued for 563 cases amounting to Rs. 6.33 crore!

பெரம்பலூரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் தலைமையேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். இதில், மகிளா நீதிமன்றம் மாவட்ட நீதிபதி பி. இந்திராணி மற்றும் சார்பு நீதிபதி கே.மோகனபிரியா ஒரு குழுவாகவும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே. முரளிதாகண்ணன் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி டி.தன்யா ஒரு குழுவாகவும். மேலும், குற்றவியல் நீதிமன்ற வழக்குகளுககு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 கவிதா உட்பட தாலுகா நீதிமன்றங்களில் குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் குன்னம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான ஆர். ராஜசேகரன் மற்றும் மூத்த வழக்கறிஞர் எஸ். இனியவன் ஒரு குழுவாகவும், வேப்பந்தட்டை மாவட்ட உரிமைவியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் வேப்பந்தட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான ஈ. தெய்வீகன் தலைமையில் ஒரு குழுவாகவும் அமைக்கப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி டி.தினேஷ் மற்றும் கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் ஜி. ரேஷ்மா மற்றும் அரசு மருத்துவர் தமிழ்செல்வன் உட்பட அனைவரும் கலந்து கொண்டு, குடும்பநல நீதிமன்ற வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள். வருவாய்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாரக்கடன் வழக்குகள் உள்பட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 563 வழக்குகள் முடிவுற்றது.

மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ.6.33.14.013.80.00. உத்தாவிற்கான ஆணை தேசிய மக்கள் நீதிமன்றம் முன்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன் வழங்கினார். இதில், வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் எதிர் வழக்காடிகளும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய ஏ.சரண்யா செய்திருந்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!