Perambalur: New detailed project guidelines released for operating mini buses!

பெரம்பலூர் மாவட்டத்தில், மினி பஸ் இயக்க விரிவான திட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கி ராமங்களின் குடியிருப்பு களில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பஸ் வாகனத்திற்கான புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழிக்காட்டு நெறிமுறைகள் அடங்கிய முக்கிய அம்சங்கள்: அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கிலோ மீட்டராக இருக்க வேண்டும். குறைந்த பட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. தொடக்கப் புள்ளி, முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு, கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பஸ் நிறுத்தம் அல்லது பஸ் நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.

1 கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரம் : முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத் துவமனை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, ரெயில் நிலையம், உழவர்சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அல்லது பஸ் நிலையத்திற்கு சற்றுமுன்பு அமைய நேரிடும் பட்சத்தில் ஒட்டு மொத்த வழங்கப்பட்ட வழித்தடத்தில் Served Route அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும் நேர்வில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, அரசு போக்குவரத்து கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுடன் கலந்தாலோசித்து மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகள் சென்றடைய உதவும் வகையில், சேவை பகு தியில் 1 கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது. பழைய மினிபஸ் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்து பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும்.

புதிய விரிவான திட்டம் : குறைந்தப்பட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும். 1989-ம் வருடத்திய தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 3 உட்பிரிவு படி சிற்றுந்து வாகனத்தின் இருக்கைகள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25 ஆக இருக்க வேண்டும். மேலும், வாகனத்தின் Wheel Base 390 Cms-க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலைப்பேருந்து அல்லது சிற்றுந்து இயக்கப் படும் வழித்தடத்தின் ஒருப குதி அல்லது போதுமானதாக இல்லாத வழித்தடங்களில் பொதுமக்கள் பயணம் மேற் கொள்ளும் வாகன இயக்கங்களில் எண்ணிக்கை நாளொன் றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத பாதையாக கருதப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தமினிபஸ் புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை மேற்கா ணும் நிபந்தனைகளுக்குட் பட்டு பொதுமக்கள். மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள், செயலாளர். வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம் என பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி. மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!