Perambalur: On Vaikuntha Ekadashi, the ‘Gateway to Heaven’ was opened in all Vishnu temples, including the Madanagopalaswamy Temple!

பெரம்பலூரில் இன்று காலை சுமார் 6.00மணி அளவில் பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி ஆலயத்தில் உற்சவர் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு கொடிமரம் வழியாக நாழி கேட்டான் வாசலுக்கு வந்தார். பின்னர், ஐதீகப்படி சரியாக காலை 6.30 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது பின்பு ஆலய பரம்பரை ஸ்தானீகர் பொன். நாராயணன் அய்யர் குமாரர் நா.மணிகண்டன் அய்யர் ஸ்தானீகர் வேத விண்ணப்பம் வாசித்த பின் கட்டியம் கூற ஸ்தானீகருக்கு முதல் மரியாதை செய்த பின் கோயில் நிர்வாகி, திருக்கோயில் கைங்கர்யக்காரர், முக்கிய பிரமுகர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து அக்ரஹார வீதியின் வழியாக கம்பத்து ஆஞ்நேயர் திருச்சுற்றுக்கு பின் ஆண்டாள் சன்னதியில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார் . பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என முழங்கினர்.
இதில் முன்னாள் தர்மகர்த்தா தெ.பெ. வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
சொர்க்கவாசல் திறந்த பின்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவர் பெருமாளையும், உற்சவ பெருமாளையும் தரிசனம் செய்தனர். இன்றிரவு வெள்ளிகருடவாகனத்தில் வானவேடிக்கை, மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலா நடக்கிறது. நேற்றைய தினம் பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலத்துடன், மோகினி அலங்காரம் செய்யப்பட்டு திவ்யரூபதரிசனத்துடன்சிறப்பு ஆராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மேற்பார்வையில் பட்டாச்சாரியார்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.
இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, தொண்டைமாந்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, கை.களத்தூர், பசும்பலூர், வி.களத்தூர், பாடாலூர், அம்மாபாளையம், லாடபுரம், கொளக்காநத்தம், குன்னம் வேப்பூர், திருமாந்துறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று வெகுவிமரிசையாக வைகுண்ட ஏகாதசி நிழச்சி நடந்தது. இதில் 4 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் வைகுண்ட ஏகாதசியை விரதம் இருந்து வழிபாடு நடத்தினர்.











kaalaimalar2@gmail.com |
9003770497