Perambalur parliamentary candidate TR Pachamuthu introductory meeting in Kulithalai and Lalgudi

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து அறிமுகப்படுத்தி வைக்கும் செயல் வீரர்கள் கூட்டம், குளித்தலை அய்யர்மலை சிவன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: இந்த குளித்தலை தொகுதி திமுக தலைவர் கலைஞரை சட்டமன்றத்திற்கு அனுப்பிய தொகுதி இந்த தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பச்சமுத்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

குளித்தலை தொகுதியில் 6 ஆயிரத்து 664 பணிக்குழு பனிக் உறுப்பினர்கள் உள்ளனர் 267 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் விவரம் இவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணிக்குழு உறுப்பினரும் உறுதியாக 15 வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் கொண்டு சேர்க்கும் பணியினை மும்முரமாக ஈடுபடுத்த வேண்டும் இந்த பணியினை மேற்கொண்டார் உறுதியாக ஜூன் மாதத்தில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் இதில் நன்கு பணியாற்றுபவர்களுக்கு வருங்காலங்களில் முன்னுரிமை வழங்கப்படும் பழைய பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எம் பி இந்த தொகுதிக்கு தேவையான நல்ல வளர்ச்சி திட்டங்களை பாராளுமன்றத்திலும் பேசவில்லை திட்டங்களையும் கொண்டு வரவில்லை, திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

ஆனால் பாரிவேந்தர் கஜா புயலின்போது 48 கோடி கல்விக் கடனை நீக்கி மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியுள்ளார். அவரை நீங்கள் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினார் குளித்தலை மாணவர்களுக்கு கல்வி உதவியும் தரமான மருத்துவ சிகிச்சையும் உறுதியாக அளிப்பார் மோடியை அப்புறப்படுத்த நெஞ்சுரத்துடன் எதற்கும் ஸ்டாலின் ஆசி பெற்ற டி.ஆர். பச்சமுத்துவிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர், லால்குடி ஸ்ரீ தேவி திருமண மண்டபத்தில் இதே போன்று வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், லால்குடி எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, ஐஜேகே மாநில செயலாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீலவாணன், மதிமுக மாவட்ட செயலாளர் சேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயசீலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!