Perambalur: Pensioners’ Grievance Redressal Meeting — Collector Announces Details!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை தலைமையில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் வரும் 19.06.2026 அன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் 11.06.2026 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் H பிரிவில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம். மேலும் 19.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!