Perambalur: Petition to the Police SP seeking to recover the outstanding money from the Chit-fund

பெரம்பலூர் மாவட்டம், காருகுடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சிவராமன் என்பவர் போலீஸ் எஸ்.பி-யிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: காருகுடியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா என்பவரின் மனைவி பச்சையம்மாள் (எ) சூரியா ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் சிவராமனை சேர்ந்து கொள்ளுமாறும், அதில் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தன் பேரில், சிவராமன், 2024-ம் ஆண்டு 7-ம் மாதம் ரூ. 2 லட்சம் சீட்டில் சேர்ந்தாகவும், அதில் அவர், அவருடைய மனைவி, மகன் மூன்று பேர்களின் பெயரில் என மூன்று சீட்டுகள் சேர்ந்தாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சீட்டு எடுத்துள்ளதாகவும், அதன் பின் இந்த ஆண்டு பிப்ரவரி-மாதம் எனக்கு ஒரு சீட்டும், கடைசி சீட்டு மே மாதம் தனக்கும் என பச்சையம்மாள் உறுதி அளித்துள்ளார். அதனை நம்பி மாதம் மாதம் எடுத்த சீட்டிற்கும், எடுக்காத சீட்டிற்கும் பணம் கட்டி வந்ததாகவும், பிப்ரவரி மாதம் சிவராமகனுக்கு வர வேண்டிய சீட்டு கொடுக்கவில்லையாம். அதனால் நான் 2-ம் மாதம் முதல் 5-ம் மாதம் வரை எந்த சீட்டுக்கும் பணம் செலுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளார். சிவராமனுக்கு சேர வேண்டிய ரூ.4 லட்சம் தனக்கு வரவேண்டும் என்றும், அதில் நான் கட்ட வேண்டியதை கழித்து பார்த்தால் ரூ. 2.26 ஆயிரம் தனக்கு பெற்றுத் தர வேண்டும் என அவர் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் எஸ்.பி ஆதார்ஸ் பசேரா விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.










kaalaimalar2@gmail.com |
9003770497