Perambalur: Police sent two mentally ill people who were roaming around with their relatives safely after treatment!
பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த அம்புஜெஸ் (32), என்பவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சித்ரா கடந்த 06.04.2023 அன்று அம்புஜெஸ்யை பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தனர். மேலும், விளாமுத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த அருண் (38), என்பவரை கடந்த 22.06.2023 அன்று வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
இரு நபர்களையும் மனநல மருத்துவர் அசோக் அவர்களால் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பீகார் மாநிலத்தை சேர்ந்த அம்புஜெஸ் (எ) அன்புஜெஸ் குமாரையும், மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அருண் ( எ ) ஹருண் கலீல் ஹான் பதன் என தெரிய வந்ததை அடுத்து இருவரையும் உதவி ஆய்வாளர் மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர் நல்ல முறையில் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.