Perambalur Power Distribution Circle new administrators accept responsibility!
தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்புதல் மற்றும் அறிமுகம் விழா நளபாகம் கூட்ட அரங்கில், திட்ட ஆலோசகர் நல்லுசாமி தலைமையில், திட்ட சிறப்பு தலைவர் துறையூர் இராசேந்திரன் வரவேற்புரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச்செயலாளரும் – மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி.இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.எம்.குமார், அரியலூர் மாவட்ட தொ.மு.ச.கவுன்சில் செயலாளர் ரெ.மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொ.மு.ச. அரியலூர் திட்ட தலைவர் இரா. திருஞானசம்பந்தம், பெரம்பலூர் திட்ட செயலாளர் பி.வேணுகோபால், பெரம்பலூர் திட்ட பொருளாளர் பி.ஆனந்தராஜ், அரியலூர் திட்ட துணை செயலாளர் வி.மதியழகன், பெரம்பலூர் கோட்ட செயலாளர்
பி.சங்கர் உள்ளிட்ட தொ.மு.ச. வில் பொறுப்பேற்ற 50 பேரை அறிமுகம் செய்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.