Perambalur: Public demands action against government employees who are acting as the DMK IT Wing! The opposition parties are merely watching!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் திமுக கட்சியின் ஆதரவாளர்களாகவும், பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினருக்கு வேலை செய்வதில் பாகுபாடுகாட்டுகின்றனர். இவர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு நேரடியாக IT wing போல சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளை மிரட்டவும், திறமையற்ற அதிகாரிகள் இவர்களுக்கு பயந்து கொண்டு அவர்கள் மீது எந்த வித புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். இதன் விளைவாக சமூக ஊடகங்களான, பேஸ்புக், வாட்ஸ் அப், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம், யூடியூப்களில் திமுகவின் அதிகார்பூர்வ IT Wing போலவே செயல்பட்டு, எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக சீமான், தவெக தலைவர் விஜய், பாஜக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், மோடி, அமித்ஷா போன்றவர்கள் நாகரீகத்தையும் மீறி விமர்சித்து அரசு ஊழியர்கள் பதிவிடுகின்றனர். தன்னை திமுகவினராக காட்டிக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், வழக்குப் பதிவு செய்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497