Perambalur: Public grievance redressal camp regarding food supply; Collector’s announcement!

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், எளம்பலூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், காரியனூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், ஒகளூர் (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), தலைமையிலும் 13.06.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.









kaalaimalar2@gmail.com |
9003770497