Perambalur: Puthirai Vannar community can apply as entrepreneurs; Collector informs!
புதிரை வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோர்களாக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35% அல்லது ரூ3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதளத்தில் (https;//newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.