Perambalur: Rahul Gandhi in the north, Muthuvel Karunanidhi and Stalin in the south raise their voices against vote thieves; A.Raja MP speaks at the protest against S.I.R!

பெரம்பலூரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு மேற்கொண்டுள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான ஆ.ராசா எம்.பி பேசியதாவது:
அரசாங்கத்தை கட்டமைக்கக்கூடிய அடிப்படை உரிமையான ஜனநாயக வாக்குரிமை திருடர்களை விடக்கூடாது என்றும், மேலும், சிறுபான்மையினர் வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகள் மற்றும் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித்திட்டத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு தனக்கும் பாதுகாவலனாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை செய்திட முயன்றிருப்பதோடு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் கலையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் (SIR) திட்டத்தை செயல்படுத்தி மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது.
வாக்குத் திருட்டை எதிர்த்து வடக்கே ராகுல்காந்தி என்றால், தெற்கே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குரல் கொடுக்கிறார். இந்திய குடியரசுக்கு ஆபத்து வந்துள்ளது. அரசாங்கத்தைக் கட்டமைக்கக்கூடிய வாக்குரிமையை பறிக்கும் வாக்குத்திருடர்களை விடக்கூடாது என்றும், அனைத்துமே கெட்டு குட்டு சுவராகிவிட்டது, பொறுத்துக்கொண்டோம், தற்போது, ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்து வந்துள்ளது அதனை விடமுடியாது என்றும் பேசினார்.
கட்சி பிரமுகர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497