Perambalur: Robbers gang up near police station; Police are actively investigating!
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், பிரபு @ பிரபாகரன் என்பவர் டயர்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார்
வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றனர். இதுபற்றி பர்னிச்சர் கடை ஓனர் அசோக் பாடாலூர் போலீசில் புகார் அளித்தார். தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் ஸ்டேசன் உள்ள பகுதியிலேயே கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.