Perambalur: Rs. 10.30 crore provided under PM Kisan scheme: District Agriculture Director Babu informed!

மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்காக 2018ம் ஆண்டு பி.எம் கிசான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 5 ஏக்கருக்கும் குறைவாக விளைநிலம் கொண்ட விவசாயிகளுக்கு, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 21வது தவணை தொகையாக ரூ.2ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலுார் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 521 விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் ரூ.10 கோடியே 30 லட்சத்து 42ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாபு தெரிவிதுள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!