Perambalur: Rs..5.74 crore new taluk office; Minister Sivashankar laid the foundation stone and inaugurated it!

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று ரூ.5.74 கோடி மதிப்பில்  கட்டப்படவுள்ள புதிய தாலூக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அவர் தெரிவித்ததாவது:

பல்வேறு அரசு துறைகள் இருந்தாலும் அனைத்திற்கும் தாய்துறை என்று அழைக்கப்படக்கூடிய வருவாயத்துறையின் குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றது. பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு கோரிக்கைகளுக்காக அணுகக்கூடிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரூ.5.74 கோடி மதிப்பில் சொந்தக் கட்டடம்  கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி வழங்கி உள்ளார் என தெரிவித்தார்.

கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் குன்னம்.சி. ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அழகு.நீலமேகம், மதியழகன், ராஜேந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் PSR @ பட்டுச்செல்வி ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!