Perambalur: Rs. 7501 crore loan target set for banks; Collector informs!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான, 2026-2027-ம் நிதி ஆண்டுக்கான மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின்படி, தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ந,மிருணாளினி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கான 2026-2027 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ 7501.06 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாய கடன்களுக்காக ரூ 6136.05 கோடி கோடியும், சிறு குறு தொழிலுக்கு ரூ. 708.28 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.656.73 கோடியும் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 82 சதவீதமும், சிறு குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 8 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மேலும் 2026-27-ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை படி, அனைத்து வங்கிகளும் இலக்கை அடைய வேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இதனால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அதிகரிக்கப்பட்ட கடன் திறன், விவசாய வளர்ச்சி, சிறு மற்றும் மத்திய அளவிலான தொழில் முனைவோர் முன்னேற்றம் மற்றும் மாவட்டத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி அடையும் என கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார். வங்கி, வருவாய், வேளாண்மை மற்றும் தொழில் துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!