Perambalur: S.I.R; Door-to-door distribution of voter registration forms begins!

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நாளை 04.11.2025 முதல் BLO க்கள் வீடு வீடாகச் சென்று ஒரு வாக்காளருக்கு 2 கணக்கெடுப்பு படிவங்களை வழங்குவார்கள். வீட்டில் உள்ள விவரமறிந்த எந்த ஒரு குடும்ப உறுப்பினரும், அந்த வீட்டிற்குரிய அனைத்து படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம். கணக்கெடுப்பு படிவத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள பெயர், புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் தலைப்பில் வழங்கப்பட்டு இருக்கும். அதன் பிறகு கோரப்பட்டிருக்கும் அனைத்து சுய விவரங்களையும் ஒவ்வொரு வாக்காளரும் நிரப்பிட வேண்டும்.
கணக்கெடுப்பு படிவத்தினை பெற்றிட்ட வாக்காளர் இதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் தனது பதிவுகளை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று நிரப்பிடலாம். வாக்காளர் பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்காவிட்டால் அவர்களது தாய், தந்தை அல்லது தாத்தா மற்றும் நெருங்கிய உறவினரின் பெயர் மற்றும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவரங்களை கண்டறிந்து அவரது பெயரை உறவினர் பெயராக நிரப்பிடலாம். அந்நேர்வுகளில் வாக்காளருக்கு கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பிட BLO க்கள் உதவி புரிவார்கள். அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் தங்கள் வசமுள்ள 2 படிவங்களில் ஒரு பிரதியில் வாக்காளர் கையொப்பமிட்டு தேவைப்படின் புதிய புகைப்படத்தினை ஒட்டி BLO வசம் திருப்பி அளித்திட வேண்டும் மற்றொரு பிரதியில் BLO ஒப்புகை பெற்று தன் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை BLO விடம் ஒப்படைத்திடும் போது எவ்வித துணை ஆவணங்களையும் வழங்கிடத் தேவையில்லை. வாக்காளர்கள் ECINET செயலி வாயிலாகவும் கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பி பதிவேற்றம் செய்திடலாம் அல்லது voters.eci.gov.in இணையதளம் வாயிலாக கணக்கெடுப்பு படிவத்தினை பதிவிறக்கம் செய்து நிரப்பி பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்திடலாம்.
BLO தங்களுக்கு வரப்பெற்ற கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பப்பட்டுள்ள விவரங்களை இப்பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து சரிபார்த்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்புவார்கள். எதிர்வரும் டிசம்பர் 09 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.
இக்கணக்கெடுப்பு பணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அந்தந்த வருவாய் வட்டாட்சியர்களும் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் கண்காணித்திடுவார்கள்.
இக்கணக்கெடுப்பு கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை முகவர்கள் (Booth Level Agents) தகுதியான அனைத்து வாக்காளர்களுக்கும் குறிப்பாக வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் சென்று சேர்வதற்கும், நிரப்பப்பட்ட அனைத்து படிவங்களும் BLO விடம் சென்று சேர்ந்திடவும் உதவி புரிந்திட வேண்டும். வாக்காளர்கள் இது தொடர்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497