Perambalur: Sewage water in residential areas due to rain; Public engaged in road blockade!

பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கழிவு நீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் மழை நீருடன் கழிவுநீரும் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்தவர்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர் சசி இன்பென்டா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்த அவர்கள், கோபம் அடைந்து குடியிருப்பு வாசிகள் இன்று மதியம் காமராஜ் வளைவு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்த போலீசார் சம்பவிடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதால், அங்கிருந்து கலைந்து சென்றனா,
தேங்கி நிற்கும் கழிவுநீரில் உள்ள குப்பை கழிவுகள் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிகளவு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோயும் பரவி வருகிறது. மேலும், குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ, கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்பட்டதாகவும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497