Perambalur: Shani Peyarchi festival at Shiva Temple! From Aquarius, entry into Pisces!

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் சனி பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெற்றது. இன்று சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு காலை 8:26 மணிக்கு பிரவேசிப்பதால் காலை 5:00 மணியளவில் மங்கல வாத்தியம் முழங்க வேத மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜைகள் காலை 7:30 மணி அளவில் நவகிரக மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரன் மற்றும் அனைத்து நவகிரங்களுக்கும் பால், தயிர், சந்தனம், வாசனை திரவியங்கள், பழச்சாறு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணியளவில் புனித நீர் கடங்கள் புறப்பாடு செய்து திருக்கோவில் வலம் வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அபிஷேகம் முடித்து அலங்கார மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், சங்கர், ராஜேந்திரன், திருஞானம் உட்பட திரளான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வேண்டி பரிகாரம் செய்து கொண்டனர். விழா உபயதாரர் தர்ம பரிபாலான சங்கம் பெரம்பலூர் பூஜைகளை கவுரிசங்கர் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497